1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (14:23 IST)

கர்நாடகாவில் தெலுங்கில் வெளியாகும் புஷ்பா! – கடுப்பான ரசிகர்கள்!

அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் கர்நாடகாவில் தெலுங்கில் வெளியாவதற்கு அம்மாநில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து சுகுமார் இயக்கியுள்ள படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சில முன்னதாக வெளியாகி வைரலானது.

நாளை இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. கர்நாடகாவில் கன்னட மொழியில் புஷ்பா வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. புஷ்பா படத்தின் போஸ்டர், ட்ரெய்லர், பாடல்களும் கூட கன்னடத்தில் வெளியாகின. ஆனால் தற்போது கர்நாடகாவில் புஷ்பா படம் தெலுங்கில் வெளியாவது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனால் கர்நாடகாவில் புஷ்பா படத்தை கன்னடத்தில் வெளியிடாவிட்டால் படத்தை புறக்கணிப்போம் என எதிர்ப்பு தெரிவித்துள்ள கன்னட ரசிகர்கள் ட்விட்டரில் #BoycottPushpaInKarnataka என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.