வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (18:41 IST)

திமுக மீது கடும் கடுப்பில் காங்கிரஸ்: சோனியாவின் கவனத்திற்கு செல்லும் பிரச்சனை!

திமுக மீது கடும் கடுப்பில் காங்கிரஸ்: சோனியாவின் கவனத்திற்கு செல்லும் பிரச்சனை!
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவருக்கு கூட மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால் திமுக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
ஏப்ரல் மாதத்தில் 3 மாநிலங்களவை எம்பி பதவி காலியாகிறது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தில் அடிப்படையில் திமுக, அதிமுகவில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார்.
 
இதனிடையே, மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால் திமுக மீது காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என தெரிகிறது. மேலும் இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் முறையிட முடிவு செய்துள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.