திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (12:42 IST)

விடாது கருப்பாய் ராமதாஸ்; படாத பாடுபடும் ஆர்.எஸ். பாரதி - பார்ட் 1 !!

பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி உதிர்த்த முத்துகள் என தனது டிவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை போட்டு வருகிறார். 
 
சமீபத்தில் ஆர்.எஸ் பாரதி சில சர்ச்சைக்குரிய வகைய்ல் பேசினார். இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் இதை விடாமல் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ”ஆர்.எஸ்.பாரதி உதிர்த்த முத்துகள்” என்ற பெயரில் அவர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருகிறார். 
 
ஆர் எஸ் பாரதி உதிர்த்த முத்துகள் - பார்ட் 1
 
1.மற்ற மாநிலங்களில் உள்ளவனெல்லாம் முட்டாள்கள். வட மாநிலங்களில் இருப்பவனுங்களுக்கு அறிவே கிடையாது. இதை நான் ஓபனாக சொல்கிறேன் - ஆர்.எஸ். பாரதி, திமுக அமைப்பு செயலாளர்.
 
2. மத்திய பிரதேச ஐகோர்ட்டில் ஒரு அரிஜன் கூட நீதிபதி கிடையாது. இங்கு வரதராஜனை நீதிபதியாக கலைஞர் உட்கார வைத்தார். அதன்பின் 7,8 ஆதிதிராவிடர்கள் ஐகோர்ட் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் ஆதிதிராவிடர்களுக்கு போட்ட பிச்சை  -ஆர்.எஸ். பாரதி, திமுக அமைப்பு செயலாளர்.
 
3. சுப்ரீம் கோர்ட் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூடாரமாகி விட்டது. நான் ஒரு வக்கீலாக இருந்தாலும், இதை நான் சொல்லியாக வேண்டும் - ஆர்.எஸ். பாரதி, திமுக அமைப்பு செயலாளர். 
 
மேலும் இது போன்ற அடுத்தடுத்த பார்ட்டுகள் அடுத்தடுத்து வெளியிடப்படும்....