1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified செவ்வாய், 3 மார்ச் 2020 (13:40 IST)

திமுகவில் விழுந்த பழைய விக்கெட்: அதிமுகவுக்கு எண்ட்ரி!

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர் என்.கே.பெருமாள் மற்றும் வரதராஜ பெருமாள். 
 
திமுகவை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட அவைத்தலைவரும், விளாத்திகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.கே.பெருமாள் மற்றும் விளாத்திகுளம் பெருந்தலைவர் வரதராஜ பெருமாள் ஆகியோர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளனர். 
 
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தற்போது வரை நடந்த தேர்தல்களில் அதிமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. எனவே, தொகுதியை பொறுத்தவரை திமுகவில் இருப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர் என கூறப்படுகிறது. 
 
ஆனால், சிலரோ திமுக சார்பில் வழங்கப்ப்ட்ட பதவிகளில் திருப்தி ஏற்படாத காரணத்தால் இவர்கள் அதிமுகவில் இணைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.