வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (11:23 IST)

பள்ளி உரிமையாளர் அறையில் ஆணுறை?சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ!

Condom
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் பள்ளி உரிமையாளரின் அறையில் ஆணுறைகள் ஆங்காங்கே சிதறி கிடந்ததாக கூறப்படும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 
 
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அந்த பகுதி மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது என்பதும் பள்ளியின் பேருந்துகள் மற்றும் சொத்துக்கள் சூறையாடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோவில் இருந்து பள்ளி உரிமையாளரின் அறையில் ஆணுறைகள் ஆங்காங்கே சிதறி கிடப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்