திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (08:56 IST)

கனியாமூர் பள்ளி கலவரம்; கலவரக்காரர்கள் 300 பேர் கைது!

Kaniyamoor School
கனியாமூர் பள்ளியில் மாணவி மர்ம மரணம் தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று போராட்டத்தில் கலவரம் வெடித்தது. பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனம் உள்ளிட்டவற்றை தீக்கிரையாக்கினர். பள்ளி அலுவலகத்தில் புகுந்து சூறையாடியதில் பல மாணவர்களின் சான்றிதழ்களும் அழிந்தன.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கலவரம் செய்ததாக 300 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சக்தி மெட்ரிக் பள்ளியை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போலீஸார் பள்ளிக்குள் யாரையும் நுழைய அனுமதிக்காமல் காவலை அதிகப்படுத்தியுள்ளனர்.