செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (13:23 IST)

கூட்டத்தில் நடந்தது என்ன?? ஏமாற்றிய நிர்வாகிகளால் ரஜினி அப்செட்!!

ரஜினிகாந்த் இன்று தனது நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது என விளக்கம் அளித்துள்ளார். 
 
கட்சி தொடங்குவது உறுதி என்று ரஜினிகாந்த் உறுதியளித்த பிறகு தனது பட வேலைகளை தொடர்ந்து கவனித்து வந்தார். இந்நிலையில் இன்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் ரஜினிகாந்த். 
 
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கட்சி குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அரசியல் கட்சி துவங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் பேசினேன். ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சி துவங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் நிறைய கேள்வி எழுப்பினர். இதற்கு நான் அளித்த பதில் திருப்தியாக இருந்தது. 
 
ஆனால், மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பில் ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றம் இருந்தது. தனிப்பட்ட முறையில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை. ஏமாற்றமே மிஞ்சியது. அது என்ன என்று நேரம் வரும்போது கூறுகிறேன்என தெரிவித்துள்ளார்.