செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 5 மார்ச் 2020 (16:01 IST)

அன்னைக்கே இத்தாலியர்களை தடை செஞ்சிருந்தா…! – நேரு குடும்பத்தை வம்பிழுக்கும் எஸ்.வி.சேகர்

கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் விசாவை ரத்து செய்துள்ளதை காங்கிரஸோடு இணைத்து பேசியுள்ளார் எஸ்.வி.சேகர்.

உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு உணரப்பட்டு வருகின்ற சமயத்தில் கொரோனா அதிகம் பரவியுள்ள நாடுகளின் மக்களுக்கு விசாவை தடை செய்துள்ளது இந்தியா.

அந்த வகையில் இத்தாலி, சீனா உள்ளிட்ட நான்கு நாடுகளை சேர்ந்த மக்களுக்கு இந்தியா வர விசா வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ‘இதை 40 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால் இந்தியா சிறப்பாக இருந்திருக்கும்” என கூறியுள்ளார்.

பொதுவாகவே சோனியாகாந்தி குடும்பத்தினரை இத்தாலிக்காரர்கள் என்றே பாஜகவினர் அதிகமாக குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் சோனியா காந்தி குடும்பத்தாரைதான் எஸ்.வி.சேகர் மறைமுகமாக நக்கலடிப்பதாக காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவரது பதிவில் அவரை கண்டித்து பதிவுகளை இட்டு வருகின்றனர்.