திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 2 மார்ச் 2024 (16:55 IST)

விசிக தனிச்சின்னத்தில் போட்டியா? திருமாவளவன் தகவல்

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
இந்த   நிலையில், தமிழ் நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சிக்கும் ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
 
இந்த  நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  மதிமுக, மற்றும் விசிக ஆகிய கட்சிகளுடன்  தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதன்படி, திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  2 தனி தொகுதிகளும்,  1 பொதுத்தொகுதியும் கேட்டப்பட்ட நிலையில்,  திமுக தரப்பில் 2 தொகுதி மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால், 2 ஆம் கட்ட  பேச்சுவார்த்தை இன்று நடைபெறவில்லை என தகவல் வெளியானது.
 
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவதுப்; 
,
''திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். திமுக கூட்டணியில்தான் தொடர்ந்து பயணிப்போம், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஏதேனும் இடைவெளி ஏற்படும் என நினைத்து அதில் நுழையலாம் என யாரும் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.  இன்னும் ஓரிரு நாட்களில் திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில்ல் ஈடுபடுவோம்.  உயர்  நிலை கூட்டம் முடிய காலதாமதம் ஆனதால் திமுஅக உடனாக பேச்சுவார்த்தைக்கு செல்லமுடியவில்லை; ஒதுக்கப்படும் அனைத்து தொகுதிகளிலும் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும்'' என்று கூறினார்.
 
மேலும், ''நாடாளுமன்றத் தேர்தலை 2 அல்லது 3 கட்டங்களில் நடத்த வேண்டும். தேர்தலுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி இருக்க கூடாது '' என்று தெரிவித்துள்ளார்.