ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 2 மார்ச் 2024 (16:40 IST)

முதல்வர் பிளக்ஸ் பேனர் கிழிப்பு.! திமுக உட்கட்சி பூசலால் பரபரப்பு..!!

Banner Tear
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் பிறந்த நாளை ஒட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகே பழைய நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் திமுக கட்சி நிர்வாகிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் 71,ஆவது பிறந்தநாள் விழா  நேற்று திமுக நகரச் செயலாளர் முருகானந்தன் தலைமையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலையில் அண்ணா சிலை பகுதியில் 71 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகரனின் ஆதரவாளர்கள், அனுமதி இன்றி ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர்.
 
இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் கே. எஸ்.தனசேகர் ஆதரவாளர்கள் வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திரு உருவப்படத்தையும். அதில் இருந்த  ஆதரவாளர்கள்  புகைப்படம் அடங்கிய பேனரையும் கிழித்து விட்டு சென்றனர்.
 
banner
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நிர்வாகிகளின் உட்கட்சி பூசல் அக்கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்த நிலையில் திமுக நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளர் கலையரசனிடம் பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 50,க்கு மேற்பட்ட  திமுகவினர் மனு கொடுத்தனர். இதனால் தாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.