500 கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கியது மாணவர்களா? அரசு விளக்கம்
'500 கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கிய பள்ளி மாணவர்கள்' என்று ஊடகங்களில் வதந்தி பரவிய நிலையில், இதுகுறித்த்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு உண்மை என்ன? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ் நாடு அரசின் ஃபேக்ட் செக் குழு தெரிவித்துள்ளதாவது:
''உளுந்தூர்பேட்டை எலவனாசூர்கோட்டையைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விரட்டி பிடித்து விசாரித்ததில், 500 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும், பிடிபட்டவர்கள் அதை சக மாணவர்களிடம் இனிப்புடன் கலந்து கொடுப்பதாகவும் ஒரு மாணவன் கூ ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் இச்செய்தி குறித்து கள்ளக்குறிச்சி காவல் துறையினர் மறுப்பு
தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட இரண்டு குற்றவாளிகளும் பள்ளி மாணவர்கள் அல்ல. அவர்களிடமிருந்து 150 மி.கி கஞ்சா கைப்பற்றப்பட்டு அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஊடகங்கள் இது போன்று தவறான செய்திகளை பரப்பாமல் தவிர்க்கவும்'' என்று தெரிவித்துள்ளது.