அமமுகவை உள்ள சேருங்க.. இல்லைனா ஓட்டு வங்கி பாதிக்கும்!? – அதிமுகவுக்கு பாஜக ஆலோசனை??

Prasanth Karthick| Last Modified புதன், 3 மார்ச் 2021 (10:18 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் அமமுக- அதிமுக இணைப்பு குறித்து பாஜக பேசி வருவதாக பேசிக்கொள்ளப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் பாஜகவுக்கு 24 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அமமுகவுக்கு ஓட்டு வங்கி உள்ளதால் ஓட்டு பிரிவதை தவிர்க்க அமமுகவையும் கூட்டணியில் சேர்க்க பாஜக அறிவுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது. ஆனால் அமமுகவை கூட்டணியில் இணைக்க அதிமுக தயக்கம் காட்டி வருவதாகவும், தொகுதி பங்கீடு பிரச்சினை ஏற்படும் என கருதினால் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ள தொகுதிகளில் கணிசமாக விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் கூட்டணி குறித்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்போதே பல தகவல்கள் தெரிய வரும் என கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :