1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Udhaynithi not participate as Candidate in election

ஒரு தொகுதி முக்கியமா? ஓவர் ஆல் தமிழ்நாடு முக்கியமா? – உதயநிதி எடுத்த திடீர் முடிவு!?

Tamilnadu
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்ப மனு அளித்த நிலையில் அவர் வேட்பாளராக களமிறங்க போவதில்லை என பேசிக் கொள்ளப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் திமுக விருப்ப மனு தாக்கல் நடந்து வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் உட்கட்சி நிலவரப்படி உதயநிதி வேட்பாளராக விருப்பம் காட்டாததாகவும் கூறப்படுகிறது. மு.கஸ்டாலினை முதல்வராக முன்னிறுத்தியுள்ள நிலையில் தேர்தலில் வெற்றிபெற தமிழகம் முழுவதும் உதயநிதி களப்பணியில் இறங்க இருப்பதாக தெரிகிறது. விருப்ப மனு கலந்துரையாடலில் அவர் பங்குபெற்றாலும் சேப்பாக்கம் தொகுதியில் வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
எத்தியோப்பியா டீக்ரே சிக்கல்: பிபிசி செய்தியாளர் கிர்மே கெப்ரு தடுத்து வைப்பு