வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (18:16 IST)

மக்கள் பிரச்சனைகளில் எந்த வித ஈடுபாடும் விஜய்க்கு இல்லை.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு..!

K Balakrishnan
நடிகர் விஜய்க்கு மக்கள் பிரச்சனையில் எந்தவித ஈடுபாடும் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய போதிலும் இதுவரை கட்சியின் கொள்கை மற்றும் மக்கள் பிரச்சனைகளில் ஈடுபாடு சில முக்கிய பிரச்சினைகளில் தனது நிலை என்ன என்பது குறித்து விஜய் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் விஜய் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் கூறியபோது நடிகர் விஜய்க்கு திரையுலகில் ஒரு செல்வாக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் களம் என்பது வேறு. இதற்கு முன்பு மக்கள் பிரச்சனைகளில் எந்த ஈடுபாடும் அவர் காட்டியதில்லை.

தமிழகத்தை அச்சுறுத்தும் ஜாதி மத பிரச்சனைகள் உட்பட எந்த விவகாரத்திலும் அவர் தனது கருத்துக்களை தெரிவித்ததில்லை. மாநில உரிமை போன்ற பிரச்சனைகளை அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. அரசியலில் அவருடைய கொள்கை என்ன? நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவாக சொன்னால்தான் அவரைப் பற்றி முடிவுக்கு வர முடியும்’ என கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்துள்ளார்

Edited by Siva