தொடர்புடைய செய்திகள்
- வில்லிவாக்கம் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுகிறதா? என்ன காரணம்?
- மெட்ரோ ரயில் பணி: சாந்தோமில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்..!
- நாட்டிலேயே நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை..! பிரதமர் மோடி தொடங்கி வைப்பு..!
- இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி.. 7 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் என அறிவிப்பு..!
- சென்னை மெட்ரோ இரயில்களில் பிப்ரவரி மாதம் இத்தனை லட்சம் பேர் பயணமா?
மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் வணிக பயன்பாட்டுக்கு அனுமதி: நிர்வாகம் முடிவு
சென்னையில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டை. அரும்பாக்கம் மற்றும் நேரு பூங்கா ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் உள்ள இடங்களில் வணிக பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மெட்ரோ பயணிகள் வருகை அதிகரித்து வருவதை அடுத்து காலியாக உள்ள இடங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக 38 கோடியில் தனியார் பங்களிப்போடு வணிக வளாகங்கள் கட்ட அனுமதிக்கப்பட்ட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் தனியார் நிறுவனங்களுடன் 12 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் டெண்டர் வெளியிட்டு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் வணிக வளாகங்கள் அமைக்கும் பணி முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்றும் இதன் வாயிலாக மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva
