மூன்று சகோதரிகள் வரிசையாக மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி காரணம்!
மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று சகோதரிகள் மரத்தில் வரிசையாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காண்ட்வா என்ற மாவட்டத்தில் சாவித்திரி, சோனு, மற்றும் லலிதா ஆகிய மூன்று சகோதரிகள் வரிசையாக மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர்
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் மூன்று சகோதரிகளும் தங்கள் தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்ததாகவும், குடும்பத்தில் ஏற்பட்ட வறுமையின் காரணமாக மூன்று சகோதரரிகளும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்காததால் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 3 சகோதரிகள் ஒரே மரத்தில் வரிசையாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.