1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (17:09 IST)

நூறும் பீரும் கொடுத்து கூடும் கூட்டமல்ல இது: பிரேமலதா ஆவேசம்

premalatha vijayakanth
நூறுக்கும் பீருக்கும் கூடிய கூட்டமல்ல இது என்றும், கொள்கைக்காக கூடிய கூட்டம் இது என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மாநில அரசின் சொத்துவரி, மின் கட்டண உயர்வு மற்றும் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி ஆகியவற்றை கண்டித்து மதுரையில் இன்று பிரேமலதா விஜயகாந்த் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிரேமலதா நூறுக்கும் பீருக்கும் கூடிய கூட்டமல்ல இது என்றும், கொள்கைக்காக கூடிய கூட்டம் இது என்றும்  என்றும் தெரிவித்தார் 
 
தமிழகத்தை ஆளும் திமுக அரசு தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்றும் அதில் ஒன்று மின்கட்டணம் உயர்வு என்றும் தெரிவித்துள்ளது
 
கருணாநிதி நினைவாக பேனா அமைக்கப்போவதாக அமைக்க வேண்டுமென்றால் தாராளமாக அண்ணா அறிவாலயத்தில் அமைக்கும் என்றும் ஆனால் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது தேவையில்லாத ஒன்று என்றும் அவர் கூறினார்
 
மக்கள் மீது தேவையில்லாத வரியை விதிப்பதை தவிர்க்கலாம் என்றும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்