வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (10:04 IST)

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை

பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பூசாரிபட்டி என்ற பகுதியில் சாலையோரமாக இளம்பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பின்னர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக  புகார் அளித்தவர்களிடம் விசாரித்தனர்.அதில் சடலமாகக் கிடந்த பெண், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து  வந்தது தெரிந்தது.
 
ஏற்கனவே இவரைக் காணவில்லை என அப்பெண்ணின் பெற்றோர் காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின் தான் போலீஸாருக்குத் தெரிந்துள்ளது.
 
மாணவி வன்புணர்வு செய்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் நான்கு தனிப்படை அமைத்து  குற்ற்வாளிகளைத் தேடி வருகின்றனர்.