130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

Last Modified வியாழன், 4 ஏப்ரல் 2019 (08:22 IST)
கடந்த 2017-18 ஆண்டு செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வுகளை எழுதிய ஒருசில மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 130 மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செது அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது
மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செயததோடு, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் மறு தேர்வு நடத்தவும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது

ஏற்கனவே இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்து 37 தற்காலிகப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த அண்ணா பல்கலைக்கழகம் தற்போது மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செய்து எடுத்துள்ள நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :