1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. college application last date is tomorrow

கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்: குவியும் மாணவ மாணவிகள்

college students
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள் என்பதால் அரசு கல்லூரிகளில் சேர மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
 
பிளஸ் டூ மற்றும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து தற்போது கல்லூரிகளில் விண்ணப்பம் செய்யும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் ஏற்கனவே 5 நாள் அவகாசம் கொடுக்கப் பட்ட நிலையில் நாளையுடன் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது 
 
இதுவரை பொறியியல் கல்லூரியில் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர்களும், கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 2 ஆயிரம் பேர்களும் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது
 
இந்த நிலையில் நாளையுடன் அவகாசம் முடிவடைய உள்ளதால் அனைத்து கல்லூரிகளிலும் மாணவ மாணவிகளின் கூட்டம் நிரம்பி வருகிறது தகவல் வெளியாகியுள்ளன 
 
 
அடுத்த கட்டுரையில்
மனைவியை 72 துண்டுகளாக வெட்டி கொலை செய்த கணவனுக்கு ஜாமின்: நீதிமன்றம் உத்தரவு