வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (19:36 IST)

துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த சல்மான் கான்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் சல்மான் கான். இவர்,  மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் தனது தந்தையுடன்  வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த மாதம் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கானின் உதவியாளரிடம் ஒருவர் கடிதம் கொடுத்திருந்தார். அதில், சல்மான் மற்றும் சலீம் ஆகிய இருவரை கொல்லத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தை உலுக்கியது.

இதையடுத்து, நடிகர் சல்மான் இன்று மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று, அவருக்கும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்குஆன கைத் துப்பாக்கிக்காக லைசன்ஸ் வேண்டி விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.