புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:13 IST)

படியில் மாணவர்கள் தொங்கியதால் பேருந்தை பறிமுதல் செய்த கலெக்டர்!

படியில் மாணவர்கள் தொங்கியதால் பேருந்தை பறிமுதல் செய்த கலெக்டர்!
பேருந்து படிகட்டில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணம் செய்ததால் பேருந்தை கலெக்டர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பள்ளி மாணவர்கள் தனியார் பேருந்து ஒன்றில் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் செய்துகொண்டிருந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த தனியார் பேருந்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்
 
இதனை அடுத்து அந்த பேருந்து பேருந்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகைப்படத்தையும் எடுத்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணம் செய்தால் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.