வெள்ளி, 7 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:20 IST)

பிறந்தநாளை முன்னிட்டு 100 இளைஞர்களுக்கு டி என் பி எஸ் சி கோச்சிங் கொடுக்கும் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்தின் 71 ஆவது பிறந்தநாள் இரு தினங்களுக்கு ரசிகர்களாலும் திரையுலக கலைஞர்களாலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

டிசம்பர் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 71 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அவர் வீடு முன்பு கூடி வழக்கம்போல தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர். ஆனால் ரஜினியின் அரசியல் வருகை குறித்த தெளிவான முடிவை அவர் அறிவித்துவிட்டதால் கடந்த ஆண்டுகளை விட கொண்டாட்டம் கம்மியாகவே இருப்பதாகவே தெரிந்தது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மகள் சௌந்தர்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆண்டுதோறும் பின் தங்கிய நிலையில் உள்ள 100 மாணவர்களின் டி என் பி எஸ் சி தேர்வுகளுக்கு கோச்சிங் வழங்கி அவர்களுக்கு வேலைக் கிடைக்க உதவ உள்ளதாக அறிவித்துள்ளனர்.