1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (08:50 IST)

கடையில் கல் வீசியது சிறு சம்பவம்: கோவை வன்முறை குறித்து வானதி ஸ்ரீனிவாசன்

சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய கோவை வந்த போது பாஜக தொண்டர்கள் கடைகளை அடைக்க சொல்லி அராஜகம் செய்ததாகவும் ஒரு சில கடைகள் மீது கல்வீசி தாக்கியதாகவும் குற்றச்சாட்டு இருந்தது 
 
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வானதி ஸ்ரீனிவாசன் ’கோவையில் கல்வீச்சு சம்பவம் என்பது சிறு சம்பவம் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கோவையில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகை தந்தார். இதனை அடுத்து கோவையில் கடைகளை அடைக்கும்படி பாஜக தொண்டர்கள் அராஜகம் செய்தனர் அடைக்காத கடைகள் மீது கல் வீசி எறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு செருப்பு கடை மிகுந்த சேதம் அடைந்தது என்பதும் அந்த கடையை கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கோவையில் கல்வீச்சு சம்பவம் விளக்கமளித்த பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவையில் பாஜக ஊர்வலத்தின்போது செருப்புக் கடையில் கல் வீசப்பட்டது சிறு சம்பவம் என்றும் அது ஊதிப் பெரிதாக்க படுகிறது என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது