வியாழன், 28 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:23 IST)

ரஜினி அப்படிச் செய்தது ஏமாற்றமளிக்கிறது – வானதி சீனிவாசன்

கடந்த 2017 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தனது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தினார். கடந்த 2020 ஆம் ஆண்டு வரும் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
 
ஆனால் திடீரென்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சென்னையிலுள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்துவந்தபோது, தான் அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை எனக் கூறினார்.
 
இந்நிலையில் பாஜக சார்பில் கோவை தெற்குத் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை எதிர்த்துப் போட்டியிடும் வானதி சீனிவாசன், ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடாமல் போனது ஏமாற்றமளிப்பதாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
 
மேலும் தமிழகம் பெருமைப்படும் வகையில் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்துள்ளார்.