பாஜக புகுந்த இடம் உருப்படாது… மு க ஸ்டாலின் ஆவேசம்!
கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் பாஜக புகுந்த இடம் உருப்படாது எனக் கூறியுள்ளார்.
கோவை துடியலூர் பகுதியில் இன்று திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டை என்கிறார் முதல்வர் பழனிச்சாமி. அந்த கோட்டையில் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டை போட்டோம். இப்போது வாஷ் அவுட் செய்யவுள்ளோம். அமைதியாக இருக்கும் கோவையில் நேற்று பாஜகவினர் பேரணி என்ற பெயரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பர். அதுபோல பாஜக புகுந்த இடமும் உருப்படாது எனக் கூறியுள்ளார்.