வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (12:57 IST)

கொரோனா களமாகும் கோவை..! ஒரே வாரத்தில் 3 பேர் பலி!

கொரோனா களமாகும் கோவை..! ஒரே வாரத்தில் 3 பேர் பலி!
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கோவையில் ஒரு வாரத்தில் மூன்று பேர் கொரோனாவால் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரத்தில் 100 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்புகள் தற்போது 300ஐ நெருங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வடவள்ளியை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதுபோல திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது பெண் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் 3 பேர் கொரோனாவால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K