கோவை மா.கம்யூ. வேட்பாளர் பி. ஆர்.நடராஜனின் சொத்து மதிப்பு

VM| Last Modified செவ்வாய், 26 மார்ச் 2019 (11:58 IST)
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி. ஆர்.நடராஜன் சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் என தெரிவித்துள்ளார்.


 
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர் நடராஜன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும்  அலுவலரான இராசாமணியிடம் மனு தாக்கல் செய்தார் .
 
அதில் தனது சொத்து மதிப்பு 12,68,572 ரூபாய் என்றும், மனைவியின் பெயரில் அசையும் சொத்து 95,15858 ரூபாயும் அசையா சொத்து 43 லட்சம் ரூபாயும், கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மனைவியின் பெயரில்  32,34,168 ரூபாய் கடன் இருப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது.மேலும் தனக்கு அசையா சொத்துக்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தனது சொத்து மதிப்பாக 6 லட்சம் ரூபாயும், மனைவி வனஜா பெயரில் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் நடராஜன் குறிப்பிட்டிருந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :