திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (16:19 IST)

டிரைவரின் வெறிச்செயல்; பள்ளி வேனில் வைத்து 4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

தமிழகத்தில் அப்போதெல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. அதுவும் குறிப்பாக பள்ளி சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் மிகவும் அதிகமாக உள்ளது. 
 
அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் 4 வயது சிறுமி கற்பழிப்பு சம்பவம் அதிர்ச்சியையு சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 29 ஆம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பும் வழியில், அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பள்ளி வேன் டிரைவும் அவருக்கு உடைந்தையாக இருந்த வேன் கிளீனரும் சேர்ந்து அந்த சிறுமியை பள்ளி வேனிலேயே கற்பழித்தது உள்ளனர். 
 
விசாரணையில் இது குறித்து தெரியவந்ததும், சிறுமி பள்ளிக்கு செல்லும் பள்ளி வேன் டிரைவர் மற்றும் கிளீனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.