1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Coimbatore BJP protest against vairamuthu

வைரமுத்துவுக்கு எதிராக உப்பு பேரணி: கோவை பாஜகவினர்களின் விநோத போராட்டம்

vairamuthu
கவிஞர் வைரமுத்து சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆண்டாள் சந்நிதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை பாஜகவினர் உப்பு பேரணி நடத்தி வைரமுத்துவுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் நந்தகுமார் இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஆண்டாள் தான் எழுதிய எந்தப் பாசுரங்களுக்கும் காசு வாங்கியதில்லை. வைரமுத்து காசு வாங்காமல், எந்தப் பாடலையும் எழுதியதில்லை. தமிழை வைத்து, சினிமாவில் பாடல் எழுதி வயிறு வளர்க்கும் வைரமுத்துவுக்கு, ஆண்டாள் குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை. ஆண்டாள் குறித்து தவறான தகவல் பரப்பிய வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல, தினமணி நாளிதழும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.

வைரமுத்துவுக்கும் தினமணி நாளிதழுக்கும் எதிர்ப்பு அதிகரித்து கொண்டே போனாலும் வைரமுத்து தரப்பில் இருந்து மன்னிப்பு கேட்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியின் பெயர் அறிவிப்பு: கமல் தகவல்