வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

65 வகையான முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: பாரதியார் பல்கலை அறிவிப்பு!

65 வகையான முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: பாரதியார் பல்கலை அறிவிப்பு!
65 வகையான முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என பாரதியார் பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 65 வகையான முதுநிலை மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளுக்கு பல்கலைகழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம் என கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
இதனைஅடுத்து மாணவர்கள் தற்போது முதுகலை பல்கலையில் சேர்வதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். எம்எஸ் மெடிக்கல் பயோ டெக்னாலஜி படிப்புக்கு மட்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது என்பதும், அதேபோல் எம்பிஏ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெறும் எனவும் பதிவாளர் தெரிவித்துள்ளார்