புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (20:50 IST)

பி.எச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்: சட்டப்பல்கலை அறிவிப்பு!

பி.எச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்: சட்டப்பல்கலை அறிவிப்பு!
பிஹெச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை ஜூன் 30 வரை நீடித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவித்துள்ளார். இது குறித்து அம்பேத்கர் பல்கலைக் கழக வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
தற்சமயம் தமிழகத்தில் நிலவி வரும் பெரும் பெருந்தொற்றினாலும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் நீட்டிப்பு செய்து உள்ளதாலும் 2021-2022 ஆம் ஆண்டில் கல்வி ஆண்டிற்கான பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 31 ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு பல்கலைக் கழக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து பி.எச்டி மாணவர்கள் அவசர அவசரமாக மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.