செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (19:04 IST)

பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வுக்கு விண்ணப்பம்: அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவர்கள் வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த பிப்ரவரி மார்ச் மாதத்தில் செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது என்பதும் இந்த தேர்வில் சர்ச்சைகள் எழுந்ததால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் மட்டும் மறுதேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அண்ணா பல்கலைகழகம் கேட்டுக்கொண்டுள்ளது