தொடர்புடைய செய்திகள்
- அறிவிப்பு பலகையில் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
- திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...
- திமுக அவதூறு பரப்பினால் கடும் பதிலடி கொடுப்போம்: அமைச்சர் வன்னியரசு
- தமிழ்நாட்டுக்கு வருகிறது ரூ.1000 கோடி முதலீடு.. முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்...
- தவெக ஆட்சியை கவிழ்க்க சதி!.. செந்தில் பாலாஜி இன்று ஆஜராவாரா?!..
41 பேர் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்க கூடாது: நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தில் முறையீடு..
கரூரில் அண்மையில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் அசம்பாவிதத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சார்பில் அரசு வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நலத்திட்ட உதவிகளை வழங்க முதலமைச்சர் விஜய் நாளை மறுநாள் கரூர் செல்ல உள்ள நிலையில், இந்த அரசு வேலை வழங்கும் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது என வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது. அரசு பணிகள் தகுதி மற்றும் விதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற அசம்பாவிதங்களில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவது முறையான நடைமுறை அல்ல என்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி தரப்பில் வாதிட திட்டமிடப்பட்டது.
எனினும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி மறுத்துவிட்டார். இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சமூக தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசின் நிவாரண நடவடிக்கைகளை ஒரு தரப்பினர் வரவேற்கும் அதே வேளையில், அரசு வேலை வழங்கும் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ள நாம் தமிழர் கட்சியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
