1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Introduces WhatsApp Service 'Nalam' for Easy Hospital OP Registration

இனி அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ் அப் மூலம் ஓபி சீட்டு.. வரிசையில் நிற்க வேண்டாம்...

அரசு மருத்துவமனை
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சீட்டு பெறுவதற்காக பொதுமக்கள் அதிகாலையிலிருந்தே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இனி பொதுமக்கள் தங்களின் வீட்டிலிருந்தே வாட்ஸ்அப் செயலி மூலம் மிக எளிதாக ஓபி சீட்டுகளை பெற்று கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
 
பொதுமக்களின் வசதிக்காக 'நலம் ஏஐ' என்ற பெயரில் புதிய வாட்ஸ்அப் சாட்பாட்  சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி, அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல விரும்பும் நோயாளிகள் தங்களுக்கான ஓபி பதிவை முன்கூட்டியே செய்துகொள்ள முடியும். 
 
இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி, மருத்துவமனைகளில் ஏற்படும் தேவையற்ற கூட்ட நெரிசலை குறைப்பதோடு, சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய மக்களின் நேரத்தையும் பெரும் சிரமத்தையும் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி, ஏழை எளிய மக்களுக்கான மருத்துவ சேவைகளை இன்னும் எளிமையாக்க தமிழக அரசு எடுத்து வரும் இந்த நவீன முயற்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
41 பேர் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்க கூடாது: நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தில் முறையீடு..