1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஜூலை 2021 (08:32 IST)

ஊரடங்கில் மேலும் தளர்வுகளா? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 5-ஆம் தேதியுடன் நிறைவடைவது அடுத்து ஊரடங்கை மேலும் நீட்டிப்பது மற்றும் மேலும் சில தளர்வுகள் வழங்குவது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார்
 
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ஆலோசனையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் மேலும் சில தளர்வுகளை அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக எந்தவித தளர்வுகளும் இன்னும் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து இன்றைய ஆலோசனைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் மேலும் சில மாவட்டங்களில் பேருந்துகளை இயக்குவது, டாஸ்மாக் கடைகளை திறப்பது உள்ளிட்ட ஆலோசனையும் இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,