திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2023 (07:39 IST)

படிப்பு மட்டும் தான் ஒரே சொத்து: விஜய் பேசியதை அப்படியே பேசிய முதல்வர் ஸ்டாலின்..!

MK Stalin
படிப்பு மட்டும் தான் உங்களிடம் இருக்கும் ஒரே சொத்து என விஜய் சமீபத்தில் நடந்த கல்வி விழாவில் பேசியதை நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விழா ஒன்றில் பேசினார். 
 
நேற்று நடந்த விழா ஒன்றில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசிய போது பள்ளி கல்வியுடன் நிறுத்தி விடாமல் எல்லோரும் கல்லூரி கல்வியை படிக்க வேண்டும். நீங்கள் எதை பத்தியும் கவலைப்படாமல் படிக்க வேண்டும், நன்றாக விளையாடி உடலை உறுதி செய்து கொள்ள வேண்டும், சமூகத்தை படிக்க வேண்டும், அந்த கல்வியின் மூலமாக பகுத்தறிவு சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
 
அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அந்த படிப்பை வைத்து சிந்திக்க வேண்டும், புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும், படிப்பு மட்டும்தான் உங்ககிட்ட என்று யாராலும் பிரிக்க முடியாத சொத்து என்று கூறினார்
 
சமீபத்தில் விஜய் கல்வி விழாவில் உங்களிடம் பணம் இருந்தால், சொத்து இருந்தால் பறித்துக் கொள்வார்கள், ஆனால் படிப்பை மட்டும் உங்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது என்று விஜய் பேசினார். விஜய் பேசியதை அப்படியே தமிழக முதல்வர் நேற்றைய விழாவில் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva