சூர்யாவின் ''வாடிவாசல்'' படத்தில் ரோபோ காளை- வெற்றிமாறன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வாடிவாசல். இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவர், பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை,அசுரன், ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில், இளையராஜா இசையமைப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இயக்குனர் வெற்றிமாறனிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் வாடிவாசல் பற்றி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த இயக்குனர் வெற்றிமாறன், '' சூர்யா நடித்து வரும் வாடிவாசலுக்கு பிரீ புரடக்சன் வேலை நடக்கிறது,. லண்டனில் அனிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தின் மூலம் காளை ஒன்றை உருவாக்கி வருகிறோம். சூர்யா வளர்க்கும் மாட்டை ஸ்கேன் எடுத்து, ஒரு ரோபோ காளை உருவாக்கி வருகிறோம் இதற்ககான வேலைகள் நடந்து வருகிறது, தற்போது எழுத்து வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது'' என்று கூறியுள்ளார்.