1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm stalin says about durga stalin visit temple

துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரது விருப்பம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

mk stalin
துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரது விருப்பம் என சென்னையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மேலும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் கருத்துகளை உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், எதிர்மறை பிரச்சாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதை விட, நேர்மறை  பிரச்சாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம் எனவும், சாதி, மதங்களின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் கட்சியுடன் நாம் மோதி வருகிறோம் என்றும் கூறினார். மேலும் கோயிலும், பக்தியும் அவரவர் உரிமை என்றும், துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரது விருப்பம் என்றும் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் மட்டுமல்ல அனைவரின் மீதும் அதிகார அத்துமீறல் செய்பவர்கள் பாஜகவினர் என்றும், 1,000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்திய ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறினார்.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்-டிடிவி. தினகரன்