திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2023 (08:13 IST)

கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி

mukesh ambani
இந்தியாவின் புனித தலங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களுக்கு முகேஷ் அம்பானி கோடி கணக்கில் நன்கொடை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.

நேற்று முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

முகேஷ் அம்பானி அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவருக்கு  திருமணம் நிச்சயக்கப்பட்ட ராதிகா ஆகியோர் சுவாமி வழிபாடு செய்தனர். இதனை அடுத்து கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய கோவில்களுக்கு ரூபாய் ஐந்து கோடி ரிலையன்ஸ்  குழுமத்தின் சார்பில் முகேஷ் அம்பானி நன்கொடை வழங்கினார்.

இந்த நன்கொடை தொகை கோவிலின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva