1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 22 நவம்பர் 2021 (19:24 IST)

மகளிர் சுய உதவிக்குழுக்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவி குழுக்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் திருப்பூரில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திமுக ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி என்பது தான். ஆனால் கடந்த ஆட்சியில் அது எங்கே போனது என்றே தெரியவில்லை. அது குறித்தெல்லாம் இந்த மேடையில் நான் பேச விரும்பவில்லை.
 
ஏனெனில் இது அரசு நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி அல்ல என்று கூறியுள்ளார். திருப்பூரில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆட்சியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் குறித்து பேசியதற்கு அதிமுக தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.