புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 நவம்பர் 2021 (10:19 IST)

என்னங்க Sir உங்க அரசியல்: ராமதாஸை கேலி செய்யும் திமுக எம்பி!

என்னங்க சார் உங்க அரசியல் என திமுக எம்பி செந்தில்குமார் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் டாக்டர் ராமதாஸ் கேலி செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
நேற்று பாமக நிர்வாகிகள் மத்தியில் பேசிய டாக்டர் ராமதாஸ் அவர்கள் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக 60 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்றும் அதற்கு தொண்டர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும் காரசாரமாக தெரிவித்திருந்தார் 
 
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய திமுக எம்பி செந்தில் குமரன் அவர்கள் கூறியதாவது:
 
-தொண்டர்கள் ரயில் மீது கல் வீசி வழக்கு
 
-கொரோன தீவிர நிலையில்
 
-மழை பேரிடர் காலங்களில்
 
தந்தை,மகன் வெளியே வராமல் வீட்டில்
 
தொண்டர்கள் மட்டும் மற்றவர்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டு இவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும்
 
இவர்கள் சொகுசாக வீட்டில் இருப்பார்கள்
 
என்னங்க Sir உங்க அரசியல்