திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2022 (15:29 IST)

நவம்பர் 4ஆம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்: முதல்வர் கலந்து கொள்கிறாரா?

cm stalin
தமிழகம் முழுவதும் நவம்பர் 4ஆம் தேதி ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 4 ஆம் தேதி திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
 
இதில் பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
 
செய்வது அறியாது சிக்கித் தவிக்கும் தமிழக முதல்வர் நவம்பர் நான்காம் தேதி ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதாக அறிந்தேன். மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது இதன் மூலமாக வெட்ட வெளிச்சமாகிவிட்டது
 
Edited by Mahendran