தொடர்புடைய செய்திகள்
- குரங்கை காப்பாற்ற முயன்ற ஓட்டுனர்! – நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்!
- தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அரசின் மாநில பாடல்! – முதல்வர் உத்தரவு!
- 10ம் வகுப்பு வரை மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை! – தமிழக அரசு உத்தரவு!
- பாஜக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!
- நடமாடும் தேநீர் கடைகளைத் திறந்துவைத்த முதல்வர் மு க ஸ்டாலின்!
இன்னுயிர் காப்போம் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
விபத்துக்குள்ளானவர்களுக்கு 48 மணி நேர இலவச சிகிச்சை மற்றும் விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூபாய் 5,000 ஊக்கத்தொகை உள்பட பல சிறப்பு அம்சங்கள் பொருந்திய இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்
இந்த திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
* தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 610 மருத்துவமனைகளில் நம்மை காக்கும் 48 - இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
* சாலை விபத்தில் சிக்கியவர்களின் முதல் 48 மணி நேரத்திற்கான மருத்துவச் செலவை அரசே இந்த திட்டத்தின் மூலம் ஏற்கும்.
* சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதே நம்மை காக்கும் 48 - இன்னுயிர் காப்போம் திட்டம் என்பதன் முதன்மை நோக்கம்
* விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மருத்துவ காப்பீடு இல்லாதவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
* விபத்துக்குள்ளானவரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகையும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இவ்வாறு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
