1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 16 டிசம்பர் 2021 (16:47 IST)

பாஜக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டவர் அரசியலிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சமீபத்தில் நடந்த கேரள மாநில சட்டசபை தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் ஸ்ரீதரன் என்பது அனைவரும் அறிந்ததே. கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் அமைய காரணமாக இருந்தவர் இவர்தான் என்பதால் இவர் மெட்ரோ ஸ்ரீதர் என்று அழைக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதரன் தனக்கு மிகவும் வயதாகி விட்டதால் அரசியலில் இருந்து விலகுவதாகவும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போது வருத்தம் அடைந்ததாகவும் ஆனால் ஒரு எம்எல்ஏவாக இருந்து எதுவும் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்ட பின் தற்போது வருத்தம் அடையவில்லை என்றும் கூறினார் 
 
மேலும் நான் அரசியல்வாதி கிடையாது என்றும் அரசியல் இருந்து விலகினாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இவர்தான்