ஊரடங்கு நீட்டிப்பு ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து: என்ன காரணம்?
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
ஆனால் தற்போது வந்த தகவலின் படி இன்றைய ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் அதற்கு பதிலாக நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
நாளைய ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு கூடுதல் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் அதே போல் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு குறித்தும் திரையரங்குகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
நாளை ஆலோசனை கூட்டம் முடிந்தவுடன் நாளை மாலை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது