1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (22:16 IST)

10ம் வகுப்பு தேர்வு எழுதிய ஹரியானா 'மாஜி' முதல்வர்

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆசிரியர் தேர்வில் முறைகேடு தொடர்பாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா
 
இவர் சிறையில் தனது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது இந்த தேர்வில் ஆங்கிலத்தில் தவிர மற்ற பாடங்களில் சவுதா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்த சவுதாலா சிறுசா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது