திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (20:26 IST)

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா? கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறதா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது 
 
இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்
 
இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் அறிவிக்கவுள்ளதாகவும், நாளைய ஆலோசனையில் பள்ளிகள் திறப்பது குறித்தும், திரையரங்குகளில் திறப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது