செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:22 IST)

ஷூட்டிங் கேப்பில் புதுச்சேரி முதல்வரை சந்தித்த விஜய் சேதுபதி

புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜய்சேதுபதி கேட்டுக் கொண்டார். 

 
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.. இந்த படத்தில் சமந்தாவும் நடித்து வருகிறார். 
 
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை, விஜய்சேதுபதி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 
 
அப்போது, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணம் நாளொன்றுக்கு ரூ.5,000 கட்டணம் வசூலித்து வந்த நிலையில், தற்போது ரூ. 28,000 வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜய்சேதுபதி கேட்டுக் கொண்டார்.