திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 4 அக்டோபர் 2021 (17:49 IST)

நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதலமைச்சர்களுக்கு - முதல்வர் கடிதம்!

நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
 
அந்த கடிதத்தில் கல்வித்துறை நிர்வாகத்தில் மாநில அரசின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதன் மூலம் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகிறது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு  நீட் குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜனின் அறிக்கையையும் அதனுடன் இணைத்து 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.